அய்யநாதன்
அய்யநாதன்புதியதலைமுறை

“தமிழகத்துக்கு இவ்ளோதான் தண்ணீர் திறந்துவிட முடியும்னு சித்தராமையா எப்படி சொல்லுவாரு?” - அய்யநாதன்

காவிரி விவகாரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு சரியான நகர்வுதானா என்ற நம்முடன் பேசினார் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்.
Published on

தமிழகத்துக்கு வினாடி 8000 கன அடி நீர் மட்டுமே திறக்க முடியும் என கர்நாடகா அரசு திட்டவட்டமாக கூறியதை அடுத்து, தமிழக சட்டமன்றக் கட்சிகள் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான இக்கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.

அதில் ‘டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து, தமிழ்நாட்டுக்கு உரிய நீரை கர்நாடகா வழங்க வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்போம்’ என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

அய்யநாதன்
காவிரி விவகாரம் : அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!

முதல்வரின் இந்த முடிவு, சரியான நகர்வுதானா என்ற நம்முடன் பேசினார் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன். அவர் பேசுகையில், இவ்வளவு தண்ணீர்தான் திறந்துவிட முடியும் என சித்தராமையா எப்படி சொல்வார்? என்று கேட்டதோடு, பல்வேறு விளக்கங்களையும் நமக்கு கொடுத்தார். அவற்றை விரிவாக, கீழிருக்கும் காணொளியில் பார்க்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com