மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை மாவட்ட ஆட்சியர், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து தலைமைச் செயலாளர் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய முதன்மைச் செயலாளரான ஷம்பு கல்லோலிகர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித் துறையில் அரசு பாடத்திட்ட செயலாளராக இருந்த உதயச்சந்திரன், தொல்லியல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளரான சுனில் பாலிவால், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் லதா ஐ.ஏ.எஸ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையரான கார்த்திகேயன் இனி கூடுதல் முழுநேர பொறுப்பாக, தமிழ்நாடு ஊரக நிதி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சித் துறையை கவனிப்பார். ஈரோடு ஆட்சியராக உள்ள எஸ்.பிரபாகர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆட்சியரான அன்புச்செல்வன், கடலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். ராமநாபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன், மதுரை மாவட்ட ஆட்சியராகவும், அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் கூடுதல் இயக்குநரான சண்முகசுந்தரம், சென்னை மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியரான தண்டபாணி அரசு அச்சகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com