\
'பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை' - அமைச்சர் செங்கோட்டையன் 

'பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை' - அமைச்சர் செங்கோட்டையன் 

'பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை' - அமைச்சர் செங்கோட்டையன் 
Published on

மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்‌

கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள ஆயிரத்து 248 பள்ளிகளை மூடிவிட்டு, அங்கு நூலகம் அமைக்க உள்ளதாக வெளியான தகவலை சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ஆயிரத்து 248 பள்ளிகளை அரசு மூடுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று குறிப்பிட்டார். தமிழகத்தில் 45 பள்ளிகளில் மட்டுமே ஒரு மாணவர் கூட சேராமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளிகளில் மீண்டும் 6 மாதத்திற்கு பின்னர் மாணவர் சேர்க்கை பணிகள் நடைபெறும் என தெரிவித்தார். மாணவர்கள் மீண்டும் சேரும்போது பள்ளிகள் செயல்படும்‌, அதுவரை அங்கு தற்காலிகமாக நூலகங்கள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக விளக்கமளித்தார். எந்த அரசு பள்ளிகளையும மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com