\
சசிகலாவின் பின்னணியில்தான் அதிமுக இயங்குகிறது: செங்கோட்டையன்

சசிகலாவின் பின்னணியில்தான் அதிமுக இயங்குகிறது: செங்கோட்டையன்

சசிகலாவின் பின்னணியில்தான் அதிமுக இயங்குகிறது: செங்கோட்டையன்
Published on: 

சசிகலாவின் பின்னணியில்தான் அதிமுக இயங்கிக் கொண்டிருக்கிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக வலிமையோடு இருப்பதாக தெரிவித்தார். ஜெயலலிதா வழியில்தான் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது எனக் கூறிய அமைச்சர், தமிழகத்தில் நல்ல திட்டங்களை நிறைவேற்றுவதற்கு சிறப்பான ஆட்சி அமைந்துள்ளது என்றார். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் பின்னணியில்தான் தற்போது அதிமுக இயங்கிக் கொண்டிருக்கிறது எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com