vijay - sengottaiyan
vijay - sengottaiyanweb

விஜய் முன்னிலையில் தவெகவில் இணையும் செங்கோட்டையன்.. அடுத்தடுத்து இணையும் முக்கிய அரசியல் புள்ளிகள்!

விஜய் முன்னிலையில் தவெகவில் செங்கோட்டையன் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது..
Published on
Summary

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது உறுதியாகியுள்ளது. செங்கோட்டையனுக்கு மாநில அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது. இதனால் தமிழக அரசியலில் புதிய மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் அவரது ஆதரவாளர்களும், விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது கிட்டத்தட்டஉறுதியாகியிருக்கிறது.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt web

அதிமுக வலிமை பெற சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று, கடந்தசெப்டம்பர் 5ஆம் தேதி, போர்க்கொடி உயர்த்தினார் செங்கோட்டையன். இதனால் அவர் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். அதன் பிறகும் செங்கோட்டையன் மேற்கொண்ட தொடர் முயற்சிகள் பலனளிக்காத நிலையில், அவர் விஜயின் கட்சியில் இணைய உள்ளதாகத் தகவல்கள் பரவின. தற்போது இந்தத் தகவல் உறுதியாகியுள்ளது.

செங்கோட்டையனும், முன்னாள் எம்.பி சத்யபாமா அவரது ஆதரவாளர்களும், வரும் 27ஆம் தேதி, விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகின்றனர். தமிழக அரசியலில் நீண்ட அனுபவம் கொண்டசெங்கோட்டையனுக்கு, தவெகவில் அமைப்பு ரீதியான பணிகளில் மாநிலஅளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படஉள்ளதாக சொல்லப்படுகிறது.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்web

ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு, புதுச்சேரி பாஜக முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன், காரைக்கால் அதிமுக முன்னாள் எம்எல்ஏ அசனா ஆகியோரும் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைகின்றனர்.

அதிமுகவை ஒருங்கிணைக்காவிட்டால் புதிய கட்சி தொடங்குவேன் என்று ஓ.பன்னீர்செல்வம் சமிக்ஞை கொடுத்துள்ள நிலையில், இதுநாள் வரையில் அவருடன் இணைந்து செயல்பட்டுவந்த செங்கோட்டையன் தவெகவில் இணையவிருப்பதாக செய்தி வெளியாகியிருப்பது அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com