தவெக தலைவர் விஜய், செங்கோட்டையன்
தவெக தலைவர் விஜய், செங்கோட்டையன்web

தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்.. விஜய் முன்னிலையில் கட்சியில் இணைப்பு!

அதிமுக தலைமையின் மீது கடும் அதிருப்தியில் இருந்துவந்த செங்கோட்டையன் விஜயின் தலைமையை ஏற்று தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார்.
Published on

முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏவுமான செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

அதிமுக தலைமையின் மீது கடும் அதிருப்தியில் இருந்துவந்த செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, தாம் வகித்துந்த கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுவதாக நேற்று கடிதத்தை ஒப்படைத்தார்.. இத்தகைய சூழலில் தவெகவில் இணையவிருப்பதால்தான் செங்கோட்டையன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் என சொல்லப்பட்டது..

எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன்
எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன்web

மேலும் அவர் தவெகவில் இணையப்போகிறாரா அல்லது திமுகவில் இணையப்போகிறாரா என்ற குழப்பங்களும் எழுந்தன. ஏனெனில், தலைமைச் செயலகத்தின் வெளியே அமைச்சர் சேகர்பாபுவைச் சந்தித்துப் பேசினார் செங்கோட்டையன்.

இந்த குழப்பான சூழலில் நேற்று தவெக தலைவர் விஜயை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அவரைச் சுற்றியிருந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்..

விஜயுடன் ஆலோசனையில் ஈடுபட்ட செங்கோட்டையன்..

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜயின் வீட்டிற்கு நேராக சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சுமார் 2 மணி நேரம் விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.

சுமார் 2 மணிநேரமாக இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், செங்கோட்டையனுக்கு நிர்வாக குழுவை வழி நடத்தும் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், செங்கோட்டையன் நேரடியாக விஜய்க்கு ரிப்போர்ட் செய்வார் என ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது..

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt desk

மேலும் நவம்பர் 27ஆம் தேதியான இன்று தவெகவில் செங்கோட்டையன் இணையவிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், இன்று தவெகவில் இணைவதற்காக செங்கோட்டையன் ஆதரவாளர்கள் ஒரு பேருந்து மூலமாக பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வருகைபுரிந்துள்ளனர்..

தவெகவில் இணைந்த செங்கோட்டையன்..

முட்டுக்காடு அருகே உள்ள விஜயின் அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, ஆதவ் அர்ஜூனா நேரில் சென்று அழைத்துவந்துள்ளார்.. பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா வரவேற்று கட்சி அலுவலகத்திற்கு உள்ளே அழைத்துச் சென்றுள்ளனர்..

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்pt web

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு தவெகவில் அணிகளின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களின் அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது..

த.வெ.க வில் இணைப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் பேசவார் என தெரிகிறது..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com