செங்கோட்டைன், எடப்பாடி பழனிசாமி
செங்கோட்டைன், எடப்பாடி பழனிசாமிpt

’கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட செங்கோட்டையன்..’ நீக்கத்திற்கு பின் சொன்னது என்ன?

அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்கும் பணி தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
Published on

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் இணைக்க கட்சித் தலைமைக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இல்லையெனில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை தாம் தொடரப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.

செங்கோட்டையன் அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பது இதன்மூலம் உறுதியான நிலையில், அடுத்தக்கட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி திண்டுக்கலில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி
செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிpt desk

ஆலோசனைக்கு பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் அமைப்பு செயலாளர் பொறுப்பு, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் விடுவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இதேபோன்று, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தில் கட்சி பொறுப்பில் இருக்கும் செங்கோட்டையனின் ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையன் சொன்னது என்ன?

தனது பதவி நீக்கம் விவகாரம் தொடர்பாக பேசிய செங்கோட்டையன், அதனை எதிர்பார்க்கவில்லை எனவும், ஜனநாயக முறைப்படி தனது கருத்தை கேட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்புதியதலைமுறை

எடப்பாடி பழனிசாமி தலைமை மீது அதிருப்தி இருந்தவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்களை மீண்டும் இணைத்து தேர்தலை சந்திப்பதே அதிமுகவின் வளர்ச்சிக்கு நல்லது என நிர்வாகிகள், தொண்டர்கள் கருதுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com