“கோடு போட்டால் ரோடு போடுபவர் முதல்வர் பழனிசாமி” - அமைச்சர் செல்லூர் ராஜூ

“கோடு போட்டால் ரோடு போடுபவர் முதல்வர் பழனிசாமி” - அமைச்சர் செல்லூர் ராஜூ

“கோடு போட்டால் ரோடு போடுபவர் முதல்வர் பழனிசாமி” - அமைச்சர் செல்லூர் ராஜூ
Published on

நான் எப்போதும் மதுரையை முன்னிறுத்தி பேசக்கூடியவன் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 45.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய அதிநவீன கூட்ட அரங்க கட்டட பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மதுரைக்கு முன்னாள் அரசு கிள்ளிக்கூட கொடுக்கவில்லை. தற்போதைய அரசு அள்ளி அள்ளி கொடுக்கிறது. தமுக்கம் மைதானத்தில் 3500 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகளில் பங்குபெறும் வகையில் கலாசார மையம் அமைக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 6 மாதத்தில் புதுமையான மதுரை மாநகரை பார்க்க்கப் போகிறார்கள்.

100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை தமிழக முதல்வர் 4 ஆண்டுகளில் செய்து சாதனை படைத்துள்ளார். மதுரையை இரண்டாம் தலைநகராக்க வேண்டும் என்ற வருவாய்த்துறை அமைச்சரின் கோரிக்கையை நான் முன்மொழிந்துள்ளேன். நான் எப்போதும் மதுரையை முன்னிறுத்தி பேசக்கூடியவன். இரண்டாம் தலைநகர் குறித்து முதல்வர், துணை முதல்வர் முடுவெடுப்பார்கள். புள்ளி வைத்தால் கோலம் போடுபவர், கோடு போட்டால் ரோடு போடுபவர் முதலமைச்சர் பழனிசாமி” எனத் தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com