தக்காளி, முருங்கைக்காய் விலை உயர்வு
தக்காளி, முருங்கைக்காய் விலை உயர்வுweb

தக்காளி, முருங்கைக்காய் விலைகள் மேலும் உயர்வு.. முருங்கை ரூ.400, தக்காளி ரூ.90!

சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் முருங்கைக்காய் விலை கிலோ 400 ரூபாயாக உயர்ந்துள்ளது.. மேலும் ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது..
Published on

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, முருங்கைக்காய் விலை அதிகரித்துள்ளது. பனிக்காலம் காரணமாக முருங்கைக்காய் வரத்து குறைந்ததால் அதன் விலை உயர்ந்துள்ளது.

முருங்கைக்காய் விலை உயர்வு
முருங்கைக்காய் விலை உயர்வு

தற்போது ஒரு கிலோ முருங்கைக்காய் 400 ரூபாய்க்கும், சில்லறை விலையில் 450 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி ஒரு கிலோ 70ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில் 90 ரூபாய் வரை விற்பனையாகிறது.

தக்காளி
தக்காளி கோப்பு படம்

இதே போல கடலூரிலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. மொத்த விற்பனை கடையில் ஒரு கிலோ தக்காளி 54 ரூபாய்க்கும், சில்லறை விலையில் 60 முதல் 65 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com