என்னை ஒழித்துக்கட்ட சிறையில் சதி: சேகர் ரெட்டி பகீர் புகார்
தொழிலதிபர் சேகர் ரெட்டி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை ஒழித்துக்கட்ட சதித்திட்டம் தீட்டப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள அவர், இது தொடர்பாக டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
அதில் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் போதி்ய பாதுகாப்பு தரும்படி சேகர்ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக மத்திய உள்துறைச் செயலாளர், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக உள்துறை செயலாளர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் சேகர் ரெட்டி தெரிவித்திருக்கிறார். புழல் சிறையிலுள்ள சில கைதிகள் வெளி ஆட்களின் உதவி்யுடன் தன்னைக் கடத்திச் செல்லவோ அல்லது ஒழித்துக் கட்டவோ திட்டம் தீட்டியதாக சிறைத்துறை கண்காணிப்பு அதிகாரிகள் மூலம் தனக்குத் தெரியவந்ததாக அவர் கூறியுள்ளார்.
புழல் சிறையிலுள்ள கைதிகளால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பது கண்கூடாக தெரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்புக் கோரி தமி|ழக உள்துறைச் செயலருக்கு சேகர் ரெட்டி அனுப்பிய மனு காவல்துறை தலைமை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.