சேகர்பாபு - முக ஸ்டாலின்
சேகர்பாபு - முக ஸ்டாலின் pt

கொளத்தூர் மக்களை நேரில் சந்தித்த ஸ்டாலின்.. கண்ணீர்விட்ட தொண்டர்கள், கதறிஅழுத சேகர்பாபு!

கொளத்தூரில் தனக்கு வாக்களத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதற்காக நேரில் சென்று தன்னுடைய நன்றியை தெரிவித்தார் முக ஸ்டாலின்.
Published on
Summary

2026 சட்டமன்றத் தேர்தலில் சொந்தக் கோட்டையான கொளத்தூரிலேயே தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 8795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த மு.க.ஸ்டாலின், தன்னை ஆதரித்த 74 ஆயிரம் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். ஸ்டாலினை பார்த்த திமுக தொண்டர்கள் கண்கலங்க, அவர்களுடன் இருந்த சேகர்பாபுவும் கண்ணீர்விட்டது அக்கட்சியின் வேதனையை வெளிப்படுத்தியது.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் முதல்வர் வேட்பாளராக முக ஸ்டாலின் போட்டியிட்டார். இத்தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், திமுக தோற்றதோடு கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் முக ஸ்டாலினும் தோல்வியை தழுவினார். இதற்கு முன்பு 3 முறை வெற்றிபெற்ற சொந்தத் தொகுதியிலேயே தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவுக்கு எதிராக முக ஸ்டாலின் தோல்வியது திமுக கட்சியினரை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்

திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரிடமே திமுக தலைவர் ஸ்டாலின் 8795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். முதலமைச்சராக இருந்த ஸ்டாலின், இம்முறை சட்டமன்றம் கூட செல்லமுடியாத சூழல் ஏற்பட்டிருப்பது அக்கட்சியினரை மிகுந்த வேதனைக்குள் தள்ளியுள்ளது.

கொளத்தூர் உள்ளிட்ட சில தொகுதிகளின் தேர்தல் பணிகள் சேகர்பாபுவிடமே ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் தோல்விக்கு சேகர்பாபுவே பொறுப்பேற்க வேண்டும் என திமுகவின் முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

சேகர்பாபு - முக ஸ்டாலின்
திமுகவிற்கு விழுந்த மாபெரும் இடி.. முன்னாள் திமுக MLA-க்கு எதிராகவே முதல்வர் ஸ்டாலின் தோல்வி!
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்

இந்தசூழலில் தனக்கு வாக்களித்த 74000 வாக்காளர்களை நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என கொளத்தூர் சென்ற முக ஸ்டாலின், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்தார். அவருடன் சேகர்பாபுவும் வந்திருந்தார். முக ஸ்டாலினை பார்த்த திமுக தொண்டர்கள் கண்ணீர்மல்க வரவேற்பு கொடுத்தனர். தொண்டர்கள் அழுவதை பார்த்த சேகர்பாபுவும் கண்ணீர்விட ஆரம்பித்துவிட்டார்.

சேகர்பாபு
சேகர்பாபு

நாங்கள் இருக்கிறோம் என தொண்டர்கள் அழுதபடி கோஷமிட, அவர்களை அழவேண்டாம் என முக ஸ்டாலின் சமாதனம் செய்தார். எப்போதும் கொளத்தூரை தன்னுடைய பிள்ளை என்று சொல்லும் முக ஸ்டாலினை இம்முறை கொளத்தூர் மக்களே தோற்கடித்திருப்பது அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திமுகவினர் தோன்றிருந்தால் கூட தாங்கள் போட்டியிட்ட தொகுதிக்கு சென்று மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என முக ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்த நிலையில், முதல் ஆளாக தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதிக்கு சென்று முக ஸ்டாலின் நன்றி தெரிவித்துவருகிறார்.

சேகர்பாபு - முக ஸ்டாலின்
#TNElections | மு.க.ஸ்டாலின் பாணியில் பதிலடி கொடுத்த V.S.பாபு!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com