துபாய் டூ மதுரை: ‘அயன்’ பட பாணியில் கடத்திவரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு சினிமா பாணியில் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 360 கிராம் தங்கத்தை வயிற்றில் வைத்து கடத்தி வந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Liquid Gold seized
Liquid Gold seizedpt desk

செய்தியாளர்: செ.சுபாஷ்

துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் துபாயில் இருந்து இன்று காலை 10:30 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்த ஸ்பைஸ்ஜெட் விமான பயணிகளை வான் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.

SpiceJet
SpiceJetpt desk

அப்போது அந்த விமானத்தில் சந்தேகப்படும்படி இருந்த ராமாதபுரம் மாவட்டத்தைச் சேர்த்த அஸ்ரப் அலி என்பவரின் மகன் உமர் பாரூக் (38) என்பவரை அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது வயிற்றுக்குள் சிறிய அளவில் உருண்டை வடிவில் ஏதோ இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இனிமா கொடுத்து 16 கேப்சூல் உருண்டைகளை வெளியே எடுத்தனர்.

Liquid Gold seized
சித்தாள் வேலைக்குச் சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்... கொலை செய்யவும் முயன்ற நபரை தேடும் போலீஸ்!

இதைத் தொடர்ந்து வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட உருண்டைகளை சோதனை செய்தனர். அதில், பேஸ்ட் வடிவில் 24 லட்சத்து 62 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்புள்ள 360 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அயன் பட பாணியில் வயிற்றில் வைத்து கடத்தி வந்த சம்பவம் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com