சீமானின் மனைவி கயல்விழி
சீமானின் மனைவி கயல்விழிமுகநூல்

” சம்மனை நான் தான் கிழிக்க சொன்னேன் “ - சீமானின் மனைவி கயல்விழி!

’நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் வந்தபோது, நாங்கள் கதவை திறக்க முடியாது என்று கூறவில்லை. முன்னாள் ராணுவ வீரரிடம் அவர் அப்படி நடந்துகொண்டது முறையில்லை. ’ - சீமானின் மனைவி கயல்விழி
Published on

காவல்துறையினரின் அழைப்பாணையை ஏற்று வியாழன்கிழனை சீமான் ஆஜாராகாததால், வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகாததால் சீமானின் நீலாங்கரை வீட்டின் கதவில், காவல்துறையினர் வியாழன்கிழமை பிற்பகலில் சம்மன் ஒட்டியுனர்.

ஒட்டிய சம்மன் கிழிக்கப்பட்டநிலையில், காவல்துறைக்கும் அவ்வீட்டின் காவலாளிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இது குறித்து சீமான் மனைவி தற்போது விளக்கமளித்துள்ளார்.

” நாங்கள் எதிர்பார்க்காமல் நடந்த சம்பவம் அது. வந்தவர்கள் முழுக்க முழுக்க திட்டமிட்டு வந்துதான் அதை செய்துள்ளனர். அவர் ஊரில் இல்லை கிருஷ்ணகிரியில் இருக்கிறார் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும்.

போலீசார் வந்தால் சம்மனை கையெழுத்திட்டு வாங்கலாம் என்றிருந்தேன். என்னிடம் பேசாமல் சம்மனை எப்படி ஒட்டிச் செல்லலாம். வெளியே வந்து அதனை படிக்க எனக்கு சங்கடமாக இருந்தது. அதனால், போலீசார் ஒட்டிச் சென்ற சம்மனை நான்தான் கிழிக்கச் சொன்னேன். முடிந்தால் என்னை கைது செய்யட்டும். வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் மீது எந்த தவறும் இல்லை, போலீசார் திட்டமிட்டே கைது செய்துள்ளனர்.

நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் வந்தபோது, நாங்கள் கதவை திறக்க முடியாது என்று கூறவில்லை. முன்னாள் ராணுவ வீரரிடம் அவர் அப்படி நடந்துகொண்டது முறையில்லை.

அந்தம்மா (நடிகை) எத்தன நாளா பேசிட்டு இருக்கு, அவரை அசிங்கப்படுத்தத்தானே பாலியல் குற்றம், பாலியல் குற்றம்னு போடுறீங்க. அவருக்கு வாக்களித்த மக்களுக்கு நீங்க என்ன மரியாதை கொடுக்குறீங்க? ”பாலியல் வழக்கின் விசாரணையை விரைவு செய்ய நீதிமன்றம் கூறியுள்ளது. அதற்காக அடுத்த நாளே வீட்டுக்கு வருவீர்களா? நடிகை வழக்கில் ஏற்கனவே மூன்றரை மணி நேரம் விசாரணைக்கு ஒத்துழைத்தார் சீமான். எங்களை மனரீதியாக துன்புறுத்த காவல்துறை திட்டமிட்டு இதனை செய்துள்ளது.

சீமானின் மனைவி கயல்விழி
மும்மொழிக்கொள்கை| ஆளுநர் பதிவு... தராசு ஷ்யாம் கருத்து என்ன?

எங்களை அசிங்கப்படுத்துகிறீர்களா?. அவர் மக்களுக்கான நேர்மையான தலைவர். நேர்மையான தலைவர் என் கணவர் சீமான், சிறையை கண்டு எங்களுக்கு பயமில்லை. தன் மீதான வழக்குகளை சீமான் சட்டப்படி சந்திப்பார்.” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com