\
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்

“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்

“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
Published on

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் விடுதலையாக உள்ள நிலையில், உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் போட்டியிடும் 35 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். வேட்பாளர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர் உரையாற்றிய சீமான், எதிர்கால மக்கள் உயிர்களைக் காப்பதற்காக, டெல்லியில் நடக்கும் போராட்டத்தைபோல சென்னையில் போராட்டம் நடத்த உள்ளதாக சீமான் கூறினார். உணவு மானியத்தை ரத்து செய்து இலவச அரிசியை இல்லாமல் செய்வதற்காகவே, இந்திய அரசு வேளாண் சட்டம் கொண்டு வந்திருப்பதாக சீமான் குற்றம்சாட்டினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலா விடுதலை ஆக இருக்கும் நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்படுவது ஐயத்தை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com