"தனித்து போட்டியிடுகிற துணிவு யாருக்காவது உண்டா?" - வேட்பாளர்களை அறிமுகம் செய்து சீமான் பேச்சு!

"சின்னத்தைப் பார்த்து வாக்கு செலுத்தும் முறையை கைவிடுங்கள் நல்ல எண்ணத்தை பார்த்து வாக்களிக்கிற நிலையை உருவாக்குங்கள்" என வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் சீமான் பேசினார்.
Seeman
Seemanfile

செய்தியாளர்: சாந்தகுமார்

சென்னை பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகபடுத்தும் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்...

வேட்பாளர்களுடன் சீமான்
வேட்பாளர்களுடன் சீமான்ட்விட்டர்

"வேட்பாளரை அறிமுகம் செய்ய வந்து விட்டான். சின்னம் என்னவென்றே தெரியவில்லை என்று, என் மக்கள், என் சொந்தங்கள் என் சின்னத்தை தேட மாட்டார்கள் எண்ணத்தை தான் களத்தில் எடுத்து கொள்வார்கள், பணம் இல்லை கவலை இல்லை, நாங்கள் வெறும் பதவிக்கானவர்கள் அல்ல, என் மக்களின் உதவிக்கானவர்கள், நாங்கள் அரசியல் செய்ய வந்தது என் மக்களை வைத்து பிழைக்க அல்ல, என் மக்களுக்காக உழைக்க, களத்தில் நிற்பது கேடுகெட்ட பணநாயகத்தை ஒழித்து மாண்புமிக்க ஜனநாயகத்தை காக்க, சின்னம் வைத்திருக்கிற கட்சிகளை விட சின்னமே இல்லாமல் சின்னமே எதுவென்று தெரியாத கட்சி துடிப்போடும் வெறியோடும் களத்தில் நிற்கிறது.

40 புரட்சியாளர்களை உங்கள் முன்பு நிறுத்துகிறேன்:

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சொல்லுவார்கள், இரைக்காக விரட்டுகிற விலங்கை விட உயிரை காக்க ஓடுகிற விலங்கின் வேகம் அதிகம் என்று, நாங்கள் அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு தேசிய இனம் என் இனத்தை மீட்க காக்க போராடுகிற நாங்கள் எங்கள் வேகம் உலகத்தில் எவரும் ஒப்பிட முடியாத அளவிற்கு வேகமாக இருக்கும். 40 வேட்பாளர்களை நான் களத்தில் நிறுத்துகிறேன் என்ற எண்ணம் கூடாது, 40 புரட்சியாளர்களை உங்கள் முன்பு நிறுத்துகிறேன். இவர்கள் அல்ல வேட்பாளர்கள் நீங்கள் ஒவ்வொருவரும் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் என்கிற எண்ணம் இருக்க வேண்டும்.

NTK
NTKpt desk

தனித்து நிற்கிறோம் தனித்துவத்தோடு நிற்கிறோம்:

கூட்டணி இல்லாமல் எப்படி வெல்வீர்கள் கூட்டணி வைத்து தோற்று போனவர்களை என்ன செய்யலாம் தூக்கிலிடமா? 40 தொகுதியிலும் தனித்து 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடுகிற துணிவு இந்த நிலத்தில் யாருக்காவது உண்டா. தனித்து நிற்கிறோம் தனித்துவத்தோடு நிற்கிறோம். மாற்று மாற்று, எதிலிருந்து மாற்று, எந்த அரசியலில் இருந்து மாற்று, எந்த கட்சி ஆட்சியிலிருந்து மாற்று இதுவரை இந்த நிலத்தை ஆண்ட கட்சியிலிருந்து மாற்று. மாற்று என்று பேசிவிட்டு அதே கட்சிகளோடு கூட்டணி வைப்பது மாற்றல்ல ஏமாற்று. வாக்குக்கு காசு. காசை வைத்து கட்சி நடத்துவது அல்ல ஆகச்சிறந்த கருத்தை வைத்து கட்சி நடத்துபவர்கள்.

எங்கு உண்மையும் நேர்மையும் இருக்கோ அங்கு மக்கள் தானாக வருவார்கள்:

பத்தாண்டு காலம் மன்மோகன் சிங், பத்தாண்டு காலம் நரேந்திர மோடி. நம் வாழ்நாளில் பாதி காலங்கள். என்ன நாடு வளர்ந்துடுச்சு. சின்னத்தைப் பார்த்து வாக்கு செலுத்தும் முறையை கைவிடுங்கள் நல்ல எண்ணத்தை பார்த்து வாக்களிக்கிற நிலையை உருவாக்குங்கள் அரை விழுக்காடு, கால் விழுக்காடு கூட்டணி சேர்ந்த உடன் பட்டுனு சின்னம் வருது. அவங்களுக்கு பல பல கோடிகள் கொடுக்கப்படுது. அப்போ உங்க அண்ணன் கிட்ட எவ்ளோ பேரம் பேசி இருப்பாங்கனு நினைக்கிற. எங்கு உண்மையும் நேர்மையும் இருக்கோ அங்கு மக்கள் தானாக வருவார்கள். சின்னமே இல்லையென்றால் என் எண்ணமே சின்னம், நம்பிக்கையோடு களத்தில் நில்லுங்கள் முடியாது என்பது முட்டாள்களின் அகராதி.

Candidates
Candidatespt desk

தேர்தல் பத்திரத்தில் காசு வாங்காத ஒரே கட்சி நாங்கள் தான்:

இந்தியை திணித்தான் எதிர்த்தேன், இந்திக்காரனை திணித்தான் சரணடைந்து விட்டேன், கொஞ்ச நாள் தான் இந்திக்காரன் எந்த வழியில் வந்தானோ அதே வழியில் ஏறி போறானா இல்லையா பாரு. கட்சி எப்படி நடக்குது போதைப் பொருள் வித்தவன் காசு, சுரண்டல் லாட்டரி வித்தவன் காசு, ஆனலைன் ரம்மி விளையாட்டு காசு, நாங்கள் நேர்மையானவர்கள். தேர்தல் பத்திரத்தில் காசு வாங்காத ஒரே கட்சி நாங்கள் தான். அதுல மட்டும் நம்ம பேரை சொல்லுறான். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் சொன்னார்.... நீ ஊமையாய் இருக்கிற வரை உன்னை தேசியவாதி என்பார்கள், உரிமை என்று பேசி விட்டால் தேச துரோகி என்பார்கள் அந்த பட்டம் எவ்வளவு பெருமைக்குரியது என்பதை என் தம்பி தங்கைகள் உணர்ந்து கொண்டு களத்தில் நில்லுங்கள்.

தண்ணி தர முடியாது என்று சொன்ன காங்கிரஸோடு எதற்காக கூட்டணி:

ஒரு சொட்டு தண்ணி தர முடியாது என்று சொன்ன காங்கிரஸ்-க்கு 10 சீட்டு. காங்கிரஸோடு எதற்காக கூட்டணி என்று எவனாவது கேட்டிருக்கிறானா? ஓட்டு உனக்கு கிடையாது. வழக்கம் போல காந்தி சிரிச்சுக்கிட்டே வருவாரு வாங்கி ஓட்டை போட்டுட்டு போ. தன்னாட்சி அதிகாரம் பெற்ற சிபிஐ, என்.ஐ.ஏ, நீதிமன்றம், தேர்தல் ஆணையம், அது சுதந்திரமா இயங்கும், நல்லா இயங்குதே, கெஜ்ரிவாலுக்கு வெளக்கமாறு எனக்கு செருப்பு, அவன் தலையில் இருந்து அடிக்கட்டும், நான் காலில் இருந்து அடிக்கிறேன், இந்தியை திணிச்சான் நான் எதிர்த்தேன், நீட், என்.ஐ.ஏ. சிஏஏ, ஜி.எஸ்.டி. எது வந்தாலும் என் மக்களின் நலத்திற்கு நான் மட்டும் தான் எதிர்த்தேன். சின்னத்திற்கு ஓட்டு இல்லை சீமானுக்கு தான் ஓட்டு.

central gov., electoral bonds, supreme court
central gov., electoral bonds, supreme courttwitter

நீங்கள் செலுத்துகிற வாக்கு மக்கள் நலன் காக்கும்:

10 ஆண்டுகள் நாட்டை ஆண்டாரே மோடி சாதனை சொல்லி ஓட்டு கேட்க வேண்டியதானே எதற்கு கூட்டணி. காங்கிரசுக்கு கொடுத்த 10 சீட்டு எங்களுக்கு தான் நம்பிக்கையோடு களத்தில் நிற்கிறேன். மனிதக் கழிவை மனிதனே அள்ளுவது அவமானம். இதையெல்லாம் மாத்தனும்னா உங்கள் வாக்கு வலிமையானது நீங்கள் செலுத்துகிற வாக்கு மக்கள் நலன் காக்கும் என்கிற உறுதியை நாம் சொல்லுகிறேன் என்ன சின்னமானாலும் உங்கள் பிள்ளைகள் வெல்லுவோம் எங்களை நம்புங்கள் எளிய மக்களின் புரட்சி உங்கள் பிள்ளை களத்தில் நிற்கிறோம்”

என்று சீமான் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com