‘தொன்மையான தமிழ் மொழி இருக்க நாம் எதற்காக இந்தி படிக்க வேண்டும்’ - சீமான் கேள்வி

‘தொன்மையான தமிழ் மொழி இருக்க நாம் எதற்காக இந்தி படிக்க வேண்டும்’ - சீமான் கேள்வி

‘தொன்மையான தமிழ் மொழி இருக்க நாம் எதற்காக இந்தி படிக்க வேண்டும்’ - சீமான் கேள்வி
Published on

சங்கரன்கோவில் பாஞ்சாங்குளம் சம்பவம் திராவிட மாடலின் தீண்டாமை என சீமான் பேட்டியளித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில், பொது சொத்தை சேதப்படுத்தியதற்காக காவல்துறை தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் சங்கரன்கோவில் பாஞ்சாங்குளம் சம்பவம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “திராவிட மாடல் என்பது தீண்டாமை. திராவிட மாடல் ஆட்சியில் இதுதான் நடக்கும்.

தேசிய கல்வி கொள்கை வந்தால் மாநிலத்தில் உள்ள அனைத்து மொழிகளும் அழிந்துவிடும். புதிய கல்விக் கொள்கை என்பது குழந்தைகளின் மரண சாசனம் என அறிஞர்களே குறிப்பிட்டு விட்டனர். மூன்றாம் வகுப்பில் இருந்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நீட் தேர்வு என அனைத்திற்கும் தேர்வை எழுதுகின்றனர்.

ஆனால் நாட்டை ஆளும் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் எந்தத் தேர்வும் எழுதுவதில்லை. நீட் தேர்வுக்கு முன் தேர்வு எழுதி மருத்துவர்கள் தகுதியானவர்கள் தானே. நீட் தேர்வில் வட மாநிலங்களில் முறைகேடு செய்து எழுதுவதாக குற்றம் சாட்டினர்.

மனுதர்மத்தில் எழுதி இருந்ததை தான் ஆ.ராசா குறிப்பிட்டார். அதில் இந்துக்களை இழிவாக பேசி உள்ளதை குறிப்பிட்டார். மனுதருமத்தில் இருப்பதை எடுத்துரைத்தார். நாம் தமிழர் கட்சி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சந்திக்க தயாராக உள்ளோம்.

உலகிலேயே மிக தொன்மையானது பழமையானது தமிழ் மொழி என பிரதமரே தாய்மொழி தமிழை குறிப்பிட்டுள்ளார். அப்ப தாய்மொழி தமிழை அனைவரும் கற்க வேண்டும். அப்படி இருக்கும் போது எதற்கு இந்தி படிக்க வேண்டும்” இவ்வாறு அவர் குறிப்பிட்டார். முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக அடுத்த மாதம் 18 ஆம் தேதி மீண்டும் சீமான் ஆஜராக வேண்டும் என நீதிபதி பாபு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com