\
“எனக்கு வாக்களித்த 18 லட்சம் பேர் மட்டும்தான் தமிழன்” - சீமான்

“எனக்கு வாக்களித்த 18 லட்சம் பேர் மட்டும்தான் தமிழன்” - சீமான்

“எனக்கு வாக்களித்த 18 லட்சம் பேர் மட்டும்தான் தமிழன்” - சீமான்
Published on: 

தமிழர்கள் தமிழை மறந்துவிட்டு தமிங்கிலர்களாக மாறி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், “தமிழ் சமூகம் தாய் மொழியை மறந்துவிட்டு தமிங்கிலர்களாக மாறி வருகின்றனர். பத்து வருடங்களாக கத்துகிறாய். உன் பேச்சை அனைவரும் கேட்கிறார்கள். ஏன் உனக்கு வாக்கு வரவில்லை என்று என்னைப்பார்த்து கேட்கிறார்கள். வரவில்லை.

ஏனென்றால் தமிழர்கள் இல்லை. எனக்கு வாக்களித்த 18 லட்சம் பேர் மட்டுமே தமிழன். தமிங்கிலர்களை பிடித்து மரத்தில் கட்டி வைத்து சட்டையை கழட்டிவிட்டு பச்சை பணமட்டையால் முதுகு தோல் உரிய உரிய அடிக்க வேண்டும். பின்னர், உப்பை அதில் தடவ வேண்டும்” எனக் கடுமையாக பேசினார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com