நெல்லை கண்ணன் கைது தமிழுக்கும் தமிழினத்திற்கும் அவமானம் - சீமான்
நெல்லை கண்ணன் கைது தமிழுக்கும் தமிழினத்திற்கும் அவமானம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “நெல்லை கண்ணன் கைது குறித்த நிலைப்பாட்டை காங்கிரஸே அறிவிக்கவில்லை. அவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். கட்சி செயல்பாடுகள் பிடிக்காமல் அதிலிருந்து ஒதுங்கியிருந்தார். அவர் ஈழ விடுதலையையோ, போராட்டங்களையோ ஆதரித்தவர் அல்ல. அதற்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். அதில் அவருடன் நாங்கள் முரண்படுவோம்.
அவரைப்போன்ற தமிழறிஞர் சம காலத்தில் இல்லை. அவர் மாபெரும் மேதை. மிகச்சிறந்த ஆளுமை. இலக்கியவாதி. அவரை கைது செய்தது மிக கொடுமையான செயலாக நான் பார்க்கிறேன். அது அவசியமற்றது. அது தமிழுக்கும் தமிழினத்திற்கும் அவமானம். பாஜக தலைவர்கள் பெரும்பாலானோர் வன்முறையான பேச்சுக்களையே பேசுகின்றனர். யாரையோ திருப்தி படுத்தவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதைவிட கொடுமையான பேச்சுக்களுக்கெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. நெல்லை கண்ணனை கைது செய்தது கண்டிக்கதக்கது.” எனத் தெரிவித்தார்.