“ராஜராஜ சோழன் முடியாட்சியில் குடியாட்சி செய்தான்; இப்போ கொடுங்கோல் ஆட்சில்ல நடக்குது” - சீமான்

“ராஜராஜ சோழன் செய்தது முடியாட்சியில் குடியாட்சி. ஆனால் இப்போது குடியாட்சியே நடக்கிறது, அதுவும் கொடுங்கோல் ஆட்சியாக நடக்கிறது” என தஞ்சையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
சீமான், நாம் தமிழர் கட்சி
சீமான், நாம் தமிழர் கட்சிPT

தஞ்சை நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலையில் 65 அடி உயர கொடி கம்பத்தில் நாம் தமிழர் கட்சியின் புலி கொடியை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்றி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது டாஸ்மாக் உயிரிழப்புகள் மற்றும் மதுஒழிப்பு குறித்து பேசிய அவர்,

“டாஸ்மாக்கில் குடித்து இறந்தவர்கள் குடித்தது, மது அல்ல.. சயனைட் என மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். டாஸ்மாக் மதுபானம் சாமானிய மனிதர்களால் குடிக்க முடியாததால் தான் குறைந்த விலைக்கு கிடைக்கக் கூடிய கள்ளை தேடி செல்கிறார்கள்.

புதிய நாடாளுமன்ற கட்டடம்
புதிய நாடாளுமன்ற கட்டடம்Twitter

அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கள்ளுக் கடை இருக்கும் போது ஏன் தமிழகத்தில் மட்டும் திறக்கக் கூடாது? ஆனால், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட அனைவரும் தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக்கை ஒழிப்போம் என வாக்குறுதி அளித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் இதுவரை வாய் திறக்கவில்லை” என்றார்.

மேலும், செங்கோல் விவகாரம் குறித்து பேசுகையில்,

”செங்கோல் கொடுத்தது என்பது ஒரு ஏமாற்று வேலை. ஏற்கெனவே முன்னாள் பிரதமர் நேருவிற்கு செங்கோல் கொடுக்கப்பட்டது. அதனால் தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை. தமிழர்களின் வாக்கு வங்கியை குறிவைத்து செங்கோலை நாடாளுமன்றத்தில் வைக்கும் அவர்கள், தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனை ஏன் உள்ளே வைக்காமல் வெளியே நிறுத்தி உள்ளீர்கள்? ராஜராஜ சோழன் முடியாட்சியில் குடியாட்சி நடத்தினான், ஆனால் தற்பொழுது குடியாட்சியில் முடியாட்சி நடக்கிறது. அதுவும் கொடுங்கோல் ஆட்சியாக நடக்கிறது. செங்கோலை கொடுக்கும்போது ஆதீனங்கள் தேவாரம் பாடும் போது, ஏன் இன்னும் பெரிய கோவில்களில் அதை பாடவில்லை யாரும்? ஒருவேளையாவது பாடச் சொல்லுங்கள்” என்றார்.

ஐ.டி. சோதனை குறித்த கேள்விக்கு,

”வருமான வரித்துறை சோதனையில் இரு தரப்பிலுமே தவறு உள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள், பையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றதாக கூறுகிறார்கள். அவர்கள் ஏன் கையில் பையை எடுத்துச் செல்ல வேண்டும். அவசியமில்லை. வருமானவரித் துறையினர் தங்களிடம் முன்கூட்டியே பாதுகாப்பு கேட்கவில்லை எனக் கூறுகிறார் எஸ்பி. எந்த ஒரு சோதனைக்குச் செல்லும் போதும் காவல்துறைக்கு தகவல் கொடுத்து அவர்கள் செல்ல மாட்டார்கள். திடீரென்று தான் வருவார்கள். தகவல் கொடுத்துவிட்டு வந்தால் அவர்கள் அங்கு தகவல் கொடுத்து விடுவார்கள். இது கூட தெரியாதா? அவர் என்ன ஐபிஎஸ்?

Senthil balaji
Senthil balajiFile image

செந்தில் பாலாஜி கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருந்தால் வருமான வரித்துறை சோதனை நடத்திக் கொள்ளுங்கள் என கூற வேண்டியது தானே. அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டில் சோதனை செய்தபோது அவருடைய ரசிகர்கள் இதுபோல் முற்றுகை செய்திருந்தால் எப்படி சோதனை செய்திருக்க முடியும்? இதேபோல் எத்தனையோ அதிகாரிகள் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது. அனைவருமே பண பலம் படைத்தவர்கள். இது போல் யாரும் செய்தது கிடையாது. அதிகாரமும் அதிகாரமும் மோதுகிறது. பேய்க்கும் பேய்க்கும் சண்டை போல நாம் வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com