\
"சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் சமூக நீதி பேசமுடியாது" - சீமான்

"சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் சமூக நீதி பேசமுடியாது" - சீமான்

"சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் சமூக நீதி பேசமுடியாது" - சீமான்
Published on: 

அனைந்திந்திய சமூக நீதி கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருப்பதன் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அகில இந்திய தலைவராக முயற்சி செய்வதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம்தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சீமான் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல சமூகநீதி பேசக்கூடாது என்று குறிப்பிட்ட அவர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திமுக அரசுக்கு துணிவு இருக்கிறதா என சவால் விடுத்தார். கூட்டணியில் இல்லாவிட்டாலும் பாஜகவை அனுசரித்துச் செல்லவேண்டிய நிலையில் அதிமுக இருப்பதாகவும் சீமான் கருத்து தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com