\
’’பாஜக வேல் யாத்திரை நடத்தி நாம் தமிழர் கட்சியை வளர்க்கிறது’’ - சீமான்

’’பாஜக வேல் யாத்திரை நடத்தி நாம் தமிழர் கட்சியை வளர்க்கிறது’’ - சீமான்

’’பாஜக வேல் யாத்திரை நடத்தி நாம் தமிழர் கட்சியை வளர்க்கிறது’’ - சீமான்
Published on

பாஜக வேல் யாத்திரை நடத்தி நாம் தமிழர் கட்சியை வளர்ப்பதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியார்களிடம் பேசிய அவர், வேல் யாத்திரை மூலம் அரசியல் நாடகம் நடத்தப்படுவதாகவும் விமர்சித்துள்ளார். அதில், ''பாஜகவினர் என்னதான் யாத்திரைகள் நடத்தினாலும், அதனால் எனக்குத்தான் நன்மை வருமே ஒழிய, நான்தான் வளருவேனே ஒழிய, அவர்களுக்கு ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை. கஷ்டப்பட்டு வேல் யாத்திரை நடத்தி நாம் தமிழர் கட்சியை பாஜக வளர்க்கிறது.

நான் பத்துவருடமாக பேசிக்கொண்டிருக்கும் விவசாயம் பற்றி திடீரென அண்ணாமலை வந்து பேசுகிறார். இது அவர்களுக்கென்று புதிய கோட்பாடு, கொள்கை இல்லாததைக் காட்டுகிறது; இந்த கோட்டைக்குள் எப்படி நுழைவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை'' என்று பேசியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com