“திமுக ஃபைல்ஸை வெளியிடுவது போல் பாஜக ஃபைல்ஸையும் அண்ணாமலை வெளியிட வேண்டும்” - சீமான்

திமுக ஃபைல்ஸை வெளியிடுவது போல் பாஜக ஃபைல்ஸையும் அண்ணாமலை வெளியிட வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மணிப்பூரில் அரங்கேறிய கொடுமைகளை மத்திய அரசு தடுக்கத் தவறியதாக குற்றம்சாட்டி நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய சீமான், “மணிப்பூரில் கலவரத்தை தடுக்கத் தவறிய மாநில முதலமைச்சர் பதவி விலக வேண்டும். பெண்களை கொடுமை படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார். தொடர்ந்து பேசுகையில், தமிழ்நாட்டில் திமுக ஃபைல்ஸை வெளியிட்டதை போல, பாஜக ஃபைல்ஸையும் அண்ணாமலை வெளியிட வேண்டுமென பேசினார். சீமான் பேசியவற்றை, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com