seeman, supreme court
seeman, supreme courtpt web

”தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாதா? உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது” - சீமான் ஆவேசம்

உச்சநீதிமன்றம் நியமித்துள்ள விசாரணை ஆணையத்தில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Published on
Summary

கரூர் உயிரிழப்பு குறித்த விசாரணை ஆணையத்தில் பூர்விக தமிழர்கள் அதிகாரிகளாக இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்ட பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் நாட்டையே உலுக்கியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில் காவல்துறை மற்றும் அரசின் சதி இருக்கிறது ஒரு பொதுவான அமைப்பு இருந்தால் தான் உண்மை வெளிவரும். எனவே, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே. கே. மகேஸ்வரி , என்.வி. அஞ்சாரியா தலைமையிலான அமர்வு கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்தனர்.

Karur stampede
Karur stampedept web

மேலும், சிபிஐ விசாரணையை கண்காணிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஸ்தோகி மற்றும் காவல்துறையில் ஐ.ஜி. பதவிக்குக் குறையாத, தமிழகப் பிரிவைச் சேர்ந்த, ஆனால் தமிழ்நாட்டைச் பூர்வீகமாகக் கொண்டிராத இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள். சிபிஐ விசாரணையை இந்தக் குழு கண்காணிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த உச்ச நீதிமன்ற உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

seeman, supreme court
கரூர் சம்பவ வழக்கு| சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.. 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழு நியமனம்!

"தமிழ் இனத்தையும் அவமதிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது" - சீமான்

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த கொடுந்துயர நிகழ்வு குறித்த உண்மையைக் கண்டறிய உச்சநீதிமன்றம் நியமித்துள்ள விசாரணை ஆணையத்தில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் பணியாற்றும் அதிகாரிகள் பங்கேற்கலாம், ஆனால், அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டிருக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது இல்லையா? தமிழ்நாட்டில், தமிழர்கள் மரண நிகழ்வு குறித்த விசாரணையில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற நிபந்தனையை விதித்ததன் மூலம் உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்த தமிழ் அதிகாரிகளின் நேர்மையையும், ஒப்படைப்பையும் ஐயுறுகிறதா? ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அவமதிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

seeman
seemanx

மாநில சுயாட்சி பேசியவர்கள் இப்போது வாய்மூடி இருப்பது ஏன்?

தமிழ் அதிகாரிகளுக்கு நடந்த இந்த அவமதிப்பிற்கு, தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கு ஏற்பட்ட இந்த தலைகுனிவிற்கு தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது. சுயமரியாதை, மாநில சுயாட்சி என பெரும் பேச்சுக்கள் பேசியவர்கள் இப்பொழுது வாய் மூடி இருப்பது ஏன்? தமிழ்நாட்டில் தமிழர்கள் உயிரிழக்கக் காரணமான துயர நிகழ்விற்காகத் தமிழர்களிடம் நடைபெறும் நீதி விசாரணையில் தமிழ் நன்கு தெரிந்த அதிகாரி இடம்பெறுவதுதானே சரியானதாக இருக்க முடியும்? தமிழர் நிலத்தின் வரலாறும், அரசியலும் தெரியாத, தமிழர் மண்ணிற்குச் சிறிதும் தொடர்பில்லாத அதிகாரிகள் விசாரணை செய்வது எப்படிச் சரியானதாக இருக்க முடியும்? அது விசாரணையில் தேவையற்ற தாமதத்தையும், தடங்கலையும் ஏற்படுத்தாதா?

seeman, supreme court
”கிட்னிகள் ஜாக்கிரதை” பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் - பேரவையில் நடந்த காரசார விவாதம்!

மணிப்பூர், குஜராத் கலவரம் மற்றும் கும்பமேள சம்பவத்தை ஒப்பிட்டு அறிக்கை...

மணிப்பூர் கலவரத்திற்கான விசாரணையில் அம்மாநில மொழி தெரியாத ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமித்தால் அம்மாநில மக்கள் ஏற்பார்களா? அல்லது கும்பமேளா நெரிசல் மரணம் குறித்து விசாரணை செய்ய இந்தி தெரியாத அதிகாரியை நியமித்தால் அம்மாநில மக்கள்தான் ஏற்பார்களா? அதிலும், குஜராத் கலவரத்தில் வன்கொடுமை செய்யப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் கொடூரக் குற்றவாளிகளை விடுவித்து வழங்கிய தவறான தீர்ப்பினை உச்சமன்றமே ரத்து செய்த நிலையில், அந்த நீதிபதியின்கீழ் கரூர் வழக்கு விசாரணை நடைபெறுவது எப்படி நம்பிக்கைக்கு உரியதாக இருக்க முடியும்?

seemans sensational statements on chattai youtube channel
சீமான் Seemanபுதிய தலைமுறை

தமிழர்களின் உரிமைக்கும் உணர்வுக்கும் இந்த நாடு உரிய மதிப்பைத் தராவிட்டால், இந்த நாட்டின் சட்டத் திட்டங்களின் மீது தமிழர்களுக்கு எப்படி மதிப்பு வரும்? நாட்டுப்பற்றுமிக்க, நடுநிலைமை தவறாத தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளை, ஒரு வழக்கு விசாரணையின் உண்மைத்தன்மை பாதிக்கும் என்று கூறி விலக்கி வைப்பது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் நேர்ந்துள்ள தேசிய இன அவமதிப்பாக, மானமிழப்பாகத்தான் பார்க்க முடியும். தமிழர்களின் மனதைக் காயப்படுத்துவதாக அமைந்துள்ள இவ்வுத்தரவை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு அரசு உடனடியாக மனுதாக்கல் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்பதை இந்த அறிக்கையைப் படிப்பவர்களின் மனச்சான்றுக்கே விட்டுவிடுகிறேன்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com