“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு

“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு

’’பேரறிவாளன் தீர்ப்பு அனைவருக்கும் பொருந்தும். அவர்களையும் விடுதலை செய்யவேண்டும். இதற்கு தனியாக போராட்டங்கள் செய்ய வைக்காதீர்கள்’’ என சீமான் கூறியுள்ளார்.

இன படுகொலை நாள் மாபெரும் இன எழுச்சி பொது கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பூந்தமல்லியில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை அருகே நசரத்பேட்டையில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு ஈழ படுகொலை சுவடுகள் மற்றும் ஒலி நாடா ஆகியவற்றை வெளியிட்டார். பின்னர் மலர் வணக்கம் நிகழ்த்தி கொடியை ஏற்றினார்.

கூட்டத்தில் பேசிய சீமான், “பேரறிவாளன் விடுதலை செய்தி மகிழ்ச்சியை விட நம்பிக்கையை தருகிறது. தொடர் சட்டம் மற்றும் அரசியல் போராட்டம் நடத்தினார். அவரே அவரது விடுதலையை சாத்தியபடுத்தினார். பேரறிவாளன் விடுதலை செய்தி மகிழ்ச்சியை விட நம்பிக்கையை தருகிறது. தொடர் சட்டம் மற்றும் அரசியல் போராட்டம் நடத்தினார். அவரே அவரது விடுதலையை சாத்தியபடுத்தினார். இந்த தீர்ப்பு அனைவருக்கும் பொருந்தும் அவர்களையும் விடுதலை செய்யவேண்டும். இதற்கு தனியாக போராட்டங்கள் செய்ய வைக்காதீர்கள்.

6 மாதகாலம் நான் வேலூர் சிறையில் அடைபடுவதற்கு முன்பு, முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் வேலூர் சிறையில்தான் இருந்தார்கள் என்பது யாருக்காவது தெரியுமா? நான் வேலூர் சிறைக்கு செல்வதற்கு முன்பு என் தம்பிகளை மொத்தமாக 3000 பேர்தான் பார்த்திருந்தார்கள். நான் சிறையில் இருந்த 6 மாதத்தில் அவர்களை சந்தித்தவர்கள் 50,000 பேர். அதற்கு பிறகுதான் இவர்கள் இவ்வளவு ஆண்டுகாலமாக சிறையில் இருக்கிறார்கள் என்பதே வெளியில் தெரியவந்துள்ளது.

ஆம்பூரில் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறிக்கு தடை என்பதால் பிரியாணி விருந்துக்கு தடை போடப்பட்டது. பிரதமரிடம் சொல்லுங்கள் மாட்டுக்கறி ஏற்றுமதியை நிறுத்துங்கள் என்று. இலங்கை, இந்தியா இரண்டு பிரதமர்களும் இன படுகொலையாளர்கள்.

நான் வேலை தூக்கும்போது விமர்சனம் செய்தார்கள். அதே வேலை பாஜக எடுத்தபோது பாராட்டியது. பாஜக தான் நாம் தமிழர் கட்சியின் பி டீமாக செயல்பட்டு வருகிறது. விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குங்கள் என நாங்கள் போராடி உரிமையை பெற்றுக்கொள்வோம். என்னுடைய பாஸ்போர்ட் மீதான தடையை நீக்குங்கள். எங்கள் விடுதலைக்கான தொடக்கம் ஐ.நாவில் உள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com