\
பன்னீர்செல்வம் போல் சசிகலாவால் திறம்பட செயல்பட முடியாது.. சீமான்

பன்னீர்செல்வம் போல் சசிகலாவால் திறம்பட செயல்பட முடியாது.. சீமான்

பன்னீர்செல்வம் போல் சசிகலாவால் திறம்பட செயல்பட முடியாது.. சீமான்
Published on

முதலமைச்சர் பன்னீர்செல்வம் போல், அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவால் திறம்பட செயல்பட முடியாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். மேலும் சட்டப்பேரவையில் தனக்கான பலத்தை நிரூபிப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார். இதுவரை 5 அதிமுக எம்எல்ஏ-க்கள் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பன்னீர்செல்வம் முதலமைச்சராக தொடர தனது ஆதரவினை தெரிவிப்பதாக கூறினார். பன்னீர்செல்வம் போல் சசிகலாவால் திறம்பட செயல்பட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோ மருத்துவனை நிர்வாகம் அளித்துள்ள விளக்கம் சந்தேகத்தை ஏற்படுத்தவதாகவும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என பன்னீர்செல்வம் தெரிவித்திருப்பது காலம் தாழ்த்திய செயல் எனவும் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com