“இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பெயர்கள் 25ஆம் தேதி அறிவிக்கப்படும்” - சீமான்

“இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பெயர்கள் 25ஆம் தேதி அறிவிக்கப்படும்” - சீமான்

“இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பெயர்கள் 25ஆம் தேதி அறிவிக்கப்படும்” - சீமான்
Published on

மக்களுக்கு தெளிவான அரசியல் விழிப்புணர்வு தேவைப்படுகிறது என்பதைதான் விஜய் கூறியுள்ளார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக,காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது நிலைப்பாடு குறித்து அறிவித்துள்ளனர். அத்துடன் மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார். அதில், “நாங்குநேரி விக்கிரவாண்டி தேர்தல் வேட்பாளர் பெயர் 25ஆம் தேதி அறிவிக்கப்படும். பிரச்சாரம் அக்டோபர் 1-ஆம் தேதியிலிருந்து தொடங்கப்படும்.  நாங்குநேரியில் எதற்கு தேர்தல் நடக்கிறது? விக்கிரவாண்டியில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர் ஏன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும். வேறு யாருக்காவது வாய்ப்பு அந்தக் கட்சி கொடுத்து இருக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்  “யாரை எங்கே வைக்க வேண்டுமோ அவரை அங்கே வைக்க வேண்டும்” என்ற விஜய் கருத்துக்கு பதில் அளித்த சீமான், “சரியான தலைவர்களை தேர்வு செய்ய தடுமாறியதால்தான் இந்தத் தவறு நடந்து கொண்டு இருக்கிறது, மக்களுக்கு அரசியல் தெளிவான விழிப்புணர்வு தேவைப்படுகிறது என்பதைதான் விஜய் கூறுகிறார். ஒரு சரியாக தலைமை இல்லாததால் தான் இந்தப் பிரச்சனை எடப்பாடி பழனிசாமிக்கு யாரும் வாக்கு செலுத்தவில்லை. ஜெயலலிதாவிற்குதான் வாக்களித்தார்கள். விபத்தாக பழனிசாமி முதலமைச்சர் ஆகிவிட்டார். யார் வேண்டுமானாலும் வந்து விடலாம் என்ற அமைப்பு தான் தவறாக இருக்கிறது. இதை தான் விஜய் கூறுகிறார்” எனக் கூறியுள்ளார்.  

இதுகுறித்து மேலும் தொடர்ந்த சீமான், “குத்திக் கொலை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல் கத்தியை செய்து கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். ஆயிரம் பதாகைகள் வைத்தால் ஒரு பதாகை விழத்தான் செய்யும் என்று ஜெயக்குமார் கூறியிருக்கிறார் மதிப்புமிக்க ஒரு உயிரை அற்பமாக பேசுவது ஆபத்தானது. அதுவும் பொறுப்புள்ள இடத்தில் இருந்து பேசுவது தவறு. உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் விழுந்தால் அதனை ஏற்றுக் கொள்வீர்களா?” என க்கேள்வி எழுப்பினார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com