“வரும் பொதுத் தேர்தலில் நின்று விளையாடுகிறேன் பாருங்கள்” - சீமான் 

“வரும் பொதுத் தேர்தலில் நின்று விளையாடுகிறேன் பாருங்கள்” - சீமான் 

“வரும் பொதுத் தேர்தலில் நின்று விளையாடுகிறேன் பாருங்கள்” - சீமான் 
Published on

இந்தியாவிலேயே இரண்டு மிகப்பெரிய பணக்கார கட்சிகளாக அதிமுக மற்றும் திமுக உள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும் சீமானின் பதில்களும்:

கேள்வி : தமிழகத்தில் டெங்கு பரவி வரும் நிலையில், மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் : மருத்துவர்கள் போராடும் நிலைக்கு செல்லாதவாறு அரசு கவனம் செலுத்தியிருக்க வேண்டும். தற்போதைய கோரிக்கை குறித்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் போராடி வருகின்றனர். அந்த போராட்டத்தில் என்னுடைய பங்களிப்பு இருந்திருக்கிறது. தற்காலிகமாக பிரச்னையை கடத்துவது மட்டும் செய்து வருகிறார்களே தவிர நிரந்தர தீர்வு கொண்டு வருவதாக தெரியவில்லை.

பருவநிலை மாற்றங்களினால் நோய் தொற்று அதிகமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த நிலையில், மருத்துவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டால் சிரமமாக இருக்கும். மக்கள் நலன் கருதி அரசு உடனடியாக பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். மருத்துவர்களின் கோரிக்கையானது நியாயமானதுதான். அதனை தீர்க்க அரசு முன்வரவில்லை. எனவே அவர்களுக்கு போராடுவதை தவிர வேறு வழியில்லை.

கேள்வி : நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றியானது பொதுத் தேர்தலிலும் எதிரொலிக்குமா? 

பதில் : அதனை பொறுத்திருந்து பார்ப்போம். பணம் கொடுத்தோம் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். கடந்த முறை பணம் கொடுத்தும் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. தற்போது வாக்களித்துள்ளார்கள் என்று கூறுவது போன்றுதான் உள்ளது. 

பணம் முதன்மையான காரணியாக இருந்து வருகிறது. பொதுத்தேர்தலில் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இடைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் இதனை கண்டுகொள்ளவில்லை. 

கேள்வி : தற்போதைய நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு வங்கி எவ்வளவு உள்ளது. 

இடைத்தேர்தலை பொருத்தவரையில் வாக்குவங்கி குறித்து கணக்கிட இயலாது. இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் எந்தவித மாற்றமும் நடைபெற போவதில்லை என மக்கள் நினைத்திருக்கலாம். இருந்தபோதிலும் பொதுத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் 15 லட்சம் வாக்குகள் கிடைக்கப்பெற்றது. 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது, யார் நாட்டை ஆண்டு மாற்றத்தை கொண்டு வரலாம் என்று நினைக்கும்போது மாறுதல் வரும். தற்போது இது குறித்து யோசிக்க தேவையற்றது. அதிமுக, திமுக, இந்தியாவில் இரண்டு பணக்கார கட்சிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இவைகள் கொள்கை கட்சி அல்ல. கோடி கட்சிகள். அந்த கட்சியுடன் மோத உள்ளோம். நின்று விளையாடுகிறேன் பாருங்கள்.

கேள்வி : உள்ளாட்சித் தேர்தல் நடத்த 4 வாரங்கள் கால அவகாசம் கேட்டு இருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? 

தற்போது இடைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தெம்பில் நிச்சயமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவார்கள்.

என சீமான் பதிலளித்தார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com