தமிழ்நாடு
காரிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கிய காவல்துறையினர்; அதிரடியாக கைது செய்யப்பட்ட சீமான்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது.
சீமானை போலீசார் கைது செய்தனர்!
இருந்தபோதும் ஆர்ப்பாட்டத்திற்கு வள்ளுவர்கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் குவிந்த நிலையில், அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இத்தகைய சூழலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது காரில் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தார். சீமானை காரில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கிய காவல்துறையினர் அவரையும் கைது செய்தனர்.