சீமான் - விஜய்
சீமான் - விஜய்web

விஜய் அரசியல்| முன்னர் வரவேற்றுவிட்டு தற்போது எதிர்ப்பது ஏன்..? - சீமான் பதில்

எந்த இரண்டு கட்சிகளுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறோமோ அந்த கட்சிகளை இணைத்துகொண்டு வந்தால் கோவம் வருகிறதா? இல்லையா? என்று விஜயை எதிர்ப்பது குறித்து சீமான் பேசியுள்ளார்.
Published on
Summary

நான் ஏசி அறையில் உட்கார்ந்து கட்சி ஆரம்பித்தவன் அல்ல சிறையில் உட்கார்ந்து கக்கி ஆரம்பித்தவன் - விஜய் குறித்து சீமான் பதில்

சரி இல்லை என்று சொல்வதற்கு ஆள் தேவையில்லை எது சரி என்று சொல்ல வேண்டும் - விஜய்க்கு சீமான் அறிவுரை

தவெக தொண்டர்கள் அரசியல் மையப்பட சிறிது காலம் ஆகும் - சீமான்

ரெட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தையொட்டி  சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மோடியின் ஆட்சியில் இந்தியாவின் 50 ஆண்டுகளுக்கு வளர்ச்சியை பார்ப்பீர்கள் என்ற அண்ணாமலை பேச்சுக்கு பதில் அளித்தார்.

சீமான்
சீமான் சீமான்

அப்போது பேசிய சீமான், 50 ஆண்டுகள் கழித்து வளர்ச்சியை பார்க்க நீங்களும் நானும் இருப்போமா என்று கேள்வி எழுப்பினார். ஆட்சி என்பது பனைமரமா என்ன.? அப்படி என்ன 50 ஆண்டுகள் கழித்து பயன் தரக்கூடிய ஒரு திட்டம், எல்லாம் தனியார் மையம் படுத்துவது தானே. 50 ஆண்டுகள் கழித்து இந்த நாடு இருக்குமா என்று பாருங்கள். இந்தியாவின் 100வது சுதந்திர தினத்தில் நாடாக இருக்குமா அல்லது இன்னொருவரின் பட்டா நிலமாக இருக்குமா என்று பாருங்கள் என்று கூறினார்.

வெவ்வேறு நாடுகளில் ஆயுதங்களை ஓடி ஓடி வாங்கி எந்த நாட்டுடன் இருந்து எங்களை காப்பாற்ற போகிறீர்கள், இந்தியாவில் ராணுவ ரகசியம் என்ற ஒன்று கிடையாது. இதற்காக என்னை தேச துரோகி என்று கூறி விடாதீர்கள் என்னைவிட மிகப்பெரிய தேச பக்தன் இல்லை எனக் கூறினார்.

சீமான் - பெரியார்
சீமான் - பெரியார்கோப்புப்படம்

தொடர்ந்து திமுக முப்பெரும் விழாவில் அக்கட்சியின் துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி புதிய, பழைய எதிரிகளை வீழ்த்துவோம் என்று கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சீமான், வாக்கிற்கு பணம் கொடுக்காமல் திமுக வென்று காட்ட வேண்டும். பெரியாருக்கு ஒரு ஓட்டும் கிடையாது காந்தி நோட்டிற்கு தான் உள்ளது என்று கூறினார்.

விஜயை எதிர்ப்பது ஏன்..? - சீமான் பதில்

விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று முன்னர் கூறிவிட்டு பின்னர் யார் உன்னை அழைத்தார் என்று கேள்விக்கு பதில் அளித்த சீமான், நாட்டுக்கு சேவை செய்ய வந்தேன் என்று கூறிவிட்டு, உச்சத்தில் இருந்து வந்தேன், பல கோடி ரூபாய் சம்பளத்தை விட்டு வந்தேன் என்று சொல்லும்போது கோபம் வருகிறது அல்லவா..? வஉசி, ஐயா முத்துராமலிங்க தேவர், காமராஜர் போன்றோர் எவ்வளவு சொத்துக்களை இழந்தார்கள், அவர்கள் இதுபோன்று கூறினார்களா? இப்படி சொல்வது சரியா? என கேள்வி எழுப்பினார்.  அவர் சொல்லும் நண்பா நண்பிகளுக்கும், என்னுடைய தம்பி, தங்கைகள் அனைவருக்காகத்தான் நானும் போராடிக் கொண்டிருக்கிறேன்.

சீமான் - விஜய்
சீமான் - விஜய்pt

திமுக, அதிமுகவை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் போது அதை இரண்டையும் இணைத்து ஒரு கட்சியை கொண்டு வந்தால் கோபம் வருமா வராதா.? திமுகவை வீழ்த்த வேண்டும் என்று சொல்லிவிட்டு அக்கட்சியின் நிறுவனரை முன்னுதாரணமாக காட்டுகிறார். அதேபோல அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆரை நிலைநிறுத்துகிறார், எந்த இரண்டு கட்சிகளை ஒழிக்கவேண்டும் என்று போராடுகிறமோ அதையே தூக்கிப்பிடிக்கிறார். சரி இல்லை என்று சொல்வதற்கு இங்கு ஆள் யாரும் தேவையில்லை, எது சரி என்று சொல்ல வேண்டும் என்று பேசினார்.

தவெக தொண்டர்கள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அவர்கள் சிறிய குழந்தைகள் என்றும் அவர்கள் பக்குவப்படுவதற்கு சிறிது காலம் எடுக்கும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com