சீமான், விஜய்
சீமான், விஜய்எக்ஸ் தளம்

”மாநாட்டுக்கு போனாலும்.. விஜய் ரசிகர்களில் பாதிப்பேர் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்..” - சீமான்

”தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகையால் எனது வாக்குகள் குறையாது. அவருடைய ரசிகர்களில் பாதிப்பேர் எனக்குத்தான் வாக்களிப்பார்கள்" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Published on

செய்தியாளர்: ரமேஷ் கண்ணன், தேனி

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று தேனி அருகே மதுராபுரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், ”தமிழகத்தில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊதியம் வழங்காமல், வெறுமனே தீபாவளி வாழ்த்துகள் மட்டும் கூறுவது ஏற்புடையதல்ல. எங்களைப் பொறுத்தவரை பாஜக ஒரு தேவையில்லாத கட்சி. நீட், ஜிஎஸ்டி உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை கொண்டுவந்தது காங்கிரஸ் ஆட்சியில்தான். அதற்கு துணையாக இருந்தது திமுக.

அதற்கடுத்ததாக ஆட்சிக்கு வந்த பாஜக மற்றும் பிரதமர் மோடி அந்த திட்டங்களை எல்லாம் வளர்த்து வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை என் இனத்தின் எதிரி காங்கிரஸ்... மானுடகுலத்தின் எதிரி பாஜக.

எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தொடங்கும்போது அவர்களது ரசிகர்களைச் சந்தித்துதான் அரசியலுக்கு வந்தனர். ஆனால் திரைத்துறையில் இருந்து வந்த நான், மக்களைச் சந்தித்து அரசியலுக்கு வந்தேன். பொதுவாக ஒரு நடிகரை, பார்ப்பதற்காக கூட்டம் அதிகளவு வரும். ஆனால் கூட்டத்திற்கு வந்தவர்களின் வாக்குகள் எல்லாம் கிடைக்கும் என்பதில் சந்தேகம்தான். விஜய்யின் அரசியல் வருகையால் எனது வாக்குகள் குறையாது. ஏனென்றால், விஜய்யின் ரசிகர்களில் பாதிப் பேர் எனக்குத்தான் வாக்களிப்பார்கள். கூட்டணியில் இருப்பவர்களுக்கு, ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என்ற கொள்கை விஜய்யின் பெருந்தன்மை. அதனை ஏற்று அவரது கூட்டணியில் இணைவது அவரவது விருப்பம். எங்களைப் பொறுத்தவரை யாருடனும் கூட்டணி கிடையாது, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: ’என்கிட்ட பணம் இல்லை.. உங்ககிட்ட இருக்குமா’- ரத்தன் டாடாவின் எளிமையான குணம்பற்றி அமிதாப் நெகிழ்ச்சி!

சீமான், விஜய்
“தாங்கொணா துயர்..” - தவெக மாநாட்டுக்கு சென்று விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு விஜய் இரங்கல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com