“நீங்க வேற இடம் பார்க்கிறது நல்லது” - அணுக்கழிவு மையத்திற்கு சீமான் எதிர்ப்பு

“நீங்க வேற இடம் பார்க்கிறது நல்லது” - அணுக்கழிவு மையத்திற்கு சீமான் எதிர்ப்பு

“நீங்க வேற இடம் பார்க்கிறது நல்லது” - அணுக்கழிவு மையத்திற்கு சீமான் எதிர்ப்பு
Published on

கூடன்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தலைமையில் பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின்நிலையம் செயல்பட்டு வருகிறது. அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை எங்கே கொட்டுவது என்கிற கேள்வி பல காலமாக நீடித்து வருகிறது. இந்நிலையில் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஜூலை 10-ல் மக்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட உள்ளது. 

இதைத்தொடர்ந்து, கூடங்குளம் அணு உலையின் ஒன்று மற்றும் இரண்டாம் அலகுகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மட்டுமே அணுக்கழிவு மையத்தில் சேமிக்கப்படும் என்றும் மற்ற அணு உலை கழிவுகள் கொண்டு வரப்படாது எனவும் அணுமின்நிலையம் விளக்கமளித்துள்ளது. சேமித்து வைக்கப்படும் அணுக்கழிவுகளில் கதிர்வீச்சு அபாயம் இல்லை என்றும், அவற்றை எதிர்காலத்தில் மற்ற உபயோகங்களுக்கும் பயன்படுத்தபடலாம் என குறிப்பிட்டுள்ளது.

கூடங்குளம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது செய்து வரும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்றும், அணுக்கழிவு மையம் அமைப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் கூடங்குளம் அணுமின் நிலையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூடன்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தலைமையில் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு அணுக்கழிவு மையத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், “தாய் நிலத்தை பாதுகாக்க வேண்டும். அணுகுண்டின் மேல் அமர்ந்திருப்பதும் அணு உலைக்கு அருகில் குடியிருப்பதும் ஒன்றுதான் என விஞ்ஞானிகளே கூறியுள்ளனர். எந்த வழியிலும் அணு உலை பாதுகாப்பு என நீங்கள் நிரூபிக்க முடியாது. அணு உலை கண்டுபிடிக்கப்பட்டது மின்சார உற்பத்திக்காகவா? மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது அணு உலையாலையா? இதற்கு பதில் இருக்கா? எங்களை மீறிதான் அணுக்கழிவை இங்கு பொதைக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை. நீங்க வேற இடம் பார்க்கிறது நல்லது” எனத் தெரிவித்தார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com