\
சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு
Published on

அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளதையொட்டி சென்னையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. இந்நிலையில் சென்னையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வழிபாட்டுத் தலங்கள், நீதிமன்றங்கள், தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சுமார் 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முக்கிய இடங்களில் போலீசாரின் கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com