Covai airportpt desk
தமிழ்நாடு
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் முத்துசாமியை தடுத்து நிறுத்திய பாதுகாப்புப் படையினர்!
கோவை விமான நிலையத்தில் அமைச்சர் முத்துசாமியை, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதால் திமுக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியை அடுத்து மும்பை செல்ல கோவை விமான நிலையத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தார். அப்போது அவருடன் அமைச்சர் முத்துசாமியும் வருகை தந்தார். இவர்களை வரவேற்க திமுக தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்த நிலையில், விமான நிலைய வாசலில் தொண்டர்களுடன் அமைச்சர் முத்துசாமியையும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர்.
covai airportpt desk
இதனால் ஆத்திரமடைந்த தொண்டர்கள் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல் துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.