சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரி நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக வினாடிக்கு 900 கனஅடி நீர் வந்துகொண்டுள்ளது.
அதேவேளையில் ஏரியில் இருந்து விவசாயத்திற்கு 580 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீர் தேவைக்காக 44 கனஅடி நீரும் அனுப்பப்படுகிறது. எனினும் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக ஏரி நிரம்பியதால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால் “வீராணம் ஏரியின் கரைகள் பலம் இழுந்துள்ளது இதனை முறையாக பலபடுத்த வேண்டும் இல்லை என்றால் ஆபத்து காத்திருகிறது. அரசு நிதி ஒதுக்கினாலும் முறைகேடாக தரமற்றப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தான் வீராணம் அவ்வப்போது கரைகள் பலமிழந்து தண்ணீர் வெளியேறுகிறது கடந்த 10 நாட்களுக்கு முன்பு வாழைகொள்ளை என்ற இடத்தில் மதகு உடந்து நீர் வெளியேறியது அதன்பின் மதகை மண் கொட்டி அடைக்கப்பட்டது மீண்டும் அதுப்போல் பாதிப்பு இல்லாமல் இருக்க முறையாக கரைகளை பலப்படுத்தவேண்டும்” என்கிறார்கள் அந்த பகுதியின் விவசாயிகள்.
ஏற்கெனவே கடந்த 2ஆம் தேதி ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக முழுகொள்ளளவான 47.50 அடியை எட்டியது. கடந்த ஆண்டில் 5 முறை வீராணம் முழுகொள்ளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.