லதா ரஜினியின் பள்ளிக்கு வைக்கப்பட்ட சீல்-ஐ அகற்ற நீதிமன்றம் உத்தரவு
லதா ரஜினிகாந்தின் பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற, கட்டட உரிமையாளருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
லதா ரஜினிகாந்த் சென்னை கிண்டியில் ஆஸ்ரம் பள்ளியை நடத்தி வருகிறார். இந்தப் பள்ளி, வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதற்கான வாடகையை சில வருடங்களாக செலுத்தவில்லை என்று கூறி பள்ளி வளாகத்தை அதன் உரிமையாளர்கள் சமீபத்தில் சீல் வைத்து பூட்டினர். இதையடுத்து பள்ளி மாணவர்கள் ஆஸ்ரம் பள்ளியின் மற்றொரு கிளைக்கு அழைக்கப்பட்டனர்.
இந்நிலையில் லதா ரஜினியின் மகள் ஐஸ்வர்யா, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் பள்ளியை பூட்டி, நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால் ரூ.6 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாணவ-மாணவிகளின் படிப்பைக் கருத்தில் கொண்டு முதலில் சீலை அகற்றுமாறும் அந்த சீல் அகற்றப்பட்டதா என்பதை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டது.