சென்னையில் கடல் சீற்றமாகக் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
நொச்சிக்குப்பம், பட்டினப்பாக்கம் ஆல்காட்குப்பம், நடுக்குப்பம் போன்ற கடற்கரை பகுதிகளில் இரவு முதல் கடற்சீற்றம் அதிகமாகி, அலைகள் 15 முதல் 20 அடிக்கு மேல் எழும்புவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, 300க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் கரைக்கு திரும்ப முடியாத நிலை இருக்கிறது.
புதுச்சேரியிலும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் இரண்டாவது நாளாக புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் யாரும் கடலுக்கும் செல்லவில்லை. அனைத்து படகுகளும் தேங்காய்த்திட்டு மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.