சென்னையில் இன்று நிழலில்லா நாள் - விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன் விளக்கம்

சென்னையில் இன்று நிழலில்லா நாள் - விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன் விளக்கம்
சென்னையில் இன்று நிழலில்லா நாள் - விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன் விளக்கம்

சென்னையில் நிழலில்லா நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதுபற்றி விஞ்ஞான் பிரசார் சபாவைச் சேர்ந்த டி.வி.வெங்கடேஸ்வரன் விளக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களில் நிழலில்லா நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்தில் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டது. தற்போது ஆக்ஸ்ட் 18ஆம் தேதியான இன்று இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தென் சென்னையில் மதியம் 12 - 1 மணியளவில் இந்த நிகழ்வை காணமுடியும். அதாவது நிழலை காணமுடியாத அளவு, நிழல் காலின் அடியில் விழும். வானம் மேகமூட்டத்துடன் இருந்தால் இந்த நிகழ்வை காணமுடியாது.

பொதுவாக நண்பகல் 12 மணியைத்தான் நாம் நண்பகல் என்று கூறுகிறோம். ஆனால் எல்லா நாட்களும் 12 மணிக்கு சூரியன் செங்குத்தாக இருப்பதில்லை. இந்திய நேரப்படி, 82.5 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில்தான் சூரியன் செங்குத்தாக அமையும். அப்படி செங்குத்தாக அமைந்துள்ள அலகாபாத்தில் மட்டும்தான் தினமும் மதியம் 12 மணி சரியான நண்பகலாக இருக்கும்.

தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் இந்த ரேகை மேற்கில் அமைந்திருப்பதால் மதியம் 12 மணிக்குமேல் நண்பகலாக இருக்கும். இதன் அடிப்படையில் இன்று சென்னையில் மட்டும் நிழலில்லா நாள் கடைபிடிக்கப்படுகிறது. இன்று நம்முடைய நிழல் காலுக்கு அடியில் சென்றுவிடும். இன்று தொடங்கி செப்டம்பர் 24 வரை ஒவ்வொரு ஊராக இந்த நாள் கடைபிடிக்கப்படும்" என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com