புவிஈர்ப்பு விசைக்கு 'நரேந்திர மோடி அலைகள்' : தமிழக விஞ்ஞானி கிருஷ்ணன்

புவிஈர்ப்பு விசைக்கு 'நரேந்திர மோடி அலைகள்' : தமிழக விஞ்ஞானி கிருஷ்ணன்
புவிஈர்ப்பு விசைக்கு 'நரேந்திர மோடி அலைகள்'  : தமிழக விஞ்ஞானி கிருஷ்ணன்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டனின் இயற்பியல் கோட்பாடுகள் தவறு என தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கண்ணன் ஜெகதளா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில், தமிழகத்தின் ஆழியாறில் செயல்படும் உலக சமுதாய சேவா மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கிருஷ்ணன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ஐசன் நியூட்டனின் கணிதங்கள் சரியாக உள்ளது ஆனால், அவரது இயற்பியல் கோட்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக தெரிவித்தார். புவிஈர்ப்பு எதிர்விசையை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் அவரது குளறுபடிகளுக்கு தன்னால் தீர்வு காணமுடியும் என்றும் கூறினார்.

ஐன்ஸ்டீன் மேதாவியாக இருந்தாலும் மிகப்பெரிய தவறுகளை செய்துள்ளதாக விஞ்ஞானி கிருஷ்ணன் குறிப்பிட்டார். ஐன்ஸ்டீன் அனைத்து கோட்பாடுகளையும் மாற்றியமைக்கப் போவதாக கூறியுள்ள விஞ்ஞானி கிருஷ்ணன், தனது ஆய்வறிக்கையை 40 நாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். இதேபோல், கருந்துளை கோட்பாடு தொடர்பாக இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங் கூறிய கருத்துகளும் தவறானவை என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தனது ஆய்வறிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் புவிஈர்ப்பு விசைக்கு 'நரேந்திர மோடி அலைகள்' என்றும் ஈர்ப்பு விசை ஒளி விளைவுக்கு 'ஹர்ஷவர்தன் விளைவு' என்றும் பெயர் சூட்டுவேன் என விஞ்ஞானி கிருஷ்ணன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com