விடுமுறை நீட்டிப்பு… வெயிலுக்கு நன்றி சொல்லுங்க குழந்தைகளே..!

தமிழகத்தில் ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
பள்ளிகள் திறப்புமுகநூல்

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கத்திரி வெயில் முடிவடைந்தாலும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் பள்ளிகளை திறந்தால் மாணாக்கர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால், திறப்பு தேதியைத் தள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டது.

பள்ளிகள் திறப்பு
இன்று ஓய்வு பெற இருந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ADSP வெள்ளத்துரை நேற்று இரவு சஸ்பெண்ட் - காரணம் என்ன?

இதையடுத்து மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, விடுமுறையை நீட்டித்து ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com