கனமழை எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. தொடர்மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூவர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து, 7 நாட்கள் விடுமுறை முடிந்து பல மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றது.
இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதேபோல், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சில பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.