கனமழை எச்சரிக்கை| 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக 13 மாவட்டங்களின் பள்ளிகளுக்கும், 2 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..
எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை..?
பள்ளிகளுக்கு மட்டும் - மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், கரூர் மற்றும் அரியலூர், மதுரை
பள்ளி, கல்லூரிகளுக்கு - திருநெல்வேலி, தென்காசி மற்றும் புதுச்சேரி, காரைக்கால்

