\
திண்டுக்கல், மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

திண்டுக்கல், மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

திண்டுக்கல், மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
Published on: 

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எதிரொலியாக திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை டாக்சிகள், ஆட்டோக்கள் உள்ளிட்டவைகள் இயங்காது என்று சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் மத்திய அரசால் உடனடியாக எதுவும் செய்ய முடியாது என்று பிரதமர் மோடி கைவிரித்த பின்னர், தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com