சீரமைப்புப் பணிகள் காரணமாக நாகை, மன்னார்குடியில் நாளை விடுமுறை‌

சீரமைப்புப் பணிகள் காரணமாக நாகை, மன்னார்குடியில் நாளை விடுமுறை‌

சீரமைப்புப் பணிகள் காரணமாக நாகை, மன்னார்குடியில் நாளை விடுமுறை‌
Published on

நாகை வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கும், மன்னார்குடி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை.

புயல் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், நாகை வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கும், மன்னார்குடி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

பணிகள் நடந்து வருவதாலும், பள்ளிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு இயங்குவதாலும் நாகை வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் மன்னார்குடி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com