\
சென்னையில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் - ஆட்சியர்

சென்னையில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் - ஆட்சியர்

சென்னையில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் - ஆட்சியர்
Published on

சென்னையில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும், விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து நான்கு மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப்படை விரைந்துள்ளது.

சென்னையில் ராயபுரம், அண்ணாசாலை, அண்ணாநகர், கொளத்தூர், மடிப்பாக்கம், ரெட்டேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தென்காசி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், கீழப்பாவூர், கடையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் கனமழை பெய்தது. இதன்காரணமாக சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்தது. 

நாளை தமிழகத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை, கன்னியாகுமரி, நீலகிரி, மதுரை மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப்படையினர் விரைந்துள்ளனர். அரக்கோணத்தில் இருந்து 4 மாவட்டங்களுக்கும் பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கோவையில் ரெட் அலர்ட்டை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. ரப்பர் படகுகளுடன் தயார் நிலையில் கோவை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி, காரைக்கால், நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் புதுச்சேரி மாநிலத்தில் அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும், விடுமுறை இல்லை என ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். அதேபோல், காஞ்சிபுரத்திலும் பள்ளி, கல்லூரிகள் வழங்கம் போல் இயங்கும் என அந்த மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com