பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறைமுகநூல்
தமிழ்நாடு
எங்கெல்லாம் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை!
குறிப்பாக, தனியார் பள்ளிகள் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை :
தேனி, திருச்சி, விழுப்புரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தனியார் பள்ளிகள் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் மற்றும் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த நவம்பர் மாத பருவத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.