\
கனமழை
கனமழைமுகநூல்

கனமழை எதிரொலி | எங்கெல்லாம் இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

கனமழை எச்சரிக்கையை அடுத்து தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Published on: 

கனமழை எச்சரிக்கையை அடுத்து தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அதிகனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், தனியார் நிறுவன ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். இச்சூழலில், மிககனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை
"கூல் லிப்" உள்ளிட்ட போதை பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என ஏன் அறிவிக்கக்கூடாது? - நீதிமன்றம்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com