ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு?– காவல்துறையினர் தீவிர விசாரணை

ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு?– காவல்துறையினர் தீவிர விசாரணை
ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு?– காவல்துறையினர் தீவிர விசாரணை

ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை பல்லாவரம் பகுதியை அடுத்த பொழிச்சலூர் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த லதா என்பவரின் மகள், பல்லாவரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் சமீபத்தில் தேர்வு எழுதும்போது பார்த்து எழுதியதாகவும், அதற்காக அவரை ஆசிரியர் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனஉளைச்சலில் மாணவி இருந்ததாக சொல்லப்படும் நிலையில், வீட்டின் படுக்கை அறையில் அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கர் நகர் போலீசார், பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com