’எனக்கு வாழப் பிடிக்கவில்லை.. லவ் யூ அம்மா’ - ரயில் முன் பாய்ந்த மாணவனின் உருக்கமான கடிதம்

’எனக்கு வாழப் பிடிக்கவில்லை.. லவ் யூ அம்மா’ - ரயில் முன் பாய்ந்த மாணவனின் உருக்கமான கடிதம்

’எனக்கு வாழப் பிடிக்கவில்லை.. லவ் யூ அம்மா’ - ரயில் முன் பாய்ந்த மாணவனின் உருக்கமான கடிதம்
Published on

ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவன் தற்கொலை செய்த நிலையில் மாணவன் எழுதிய கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர் 2-வது ரெயில்வே கேட் அருகே 17வயது சிறுவன் ரெயிலில் அடிப்பட்டு சடலமாக கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து ரெயிலில் அடிப்பட்டு இறந்த சிறுவன் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திருப்பூர் பலவஞ்சிப்பாளையம் மூகாம்பிகை நகரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் விமல்ராஜ் என்பதும், இவர் 11ஆம் வகுப்பு மாணவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் விமல்ராஜூக்கு திக்குவாய் இருந்துள்ளது. இதனால் தனது நண்பர்களுடன் சகஜமாக பேச முடியவில்லை என்று பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். இதற்கிடையே மாணவனின் வீட்டில் ஒரு கடிதம் இருந்துள்ளது. அதனை போலீசார் எடுத்து பார்த்தனர்.

அப்போது அது மாணவன் எழுதிய கடிதம் என்பது தெரியவந்தது. அந்த கடிதத்தில் எனக்கு திக்கு வாய் என்பதால் நண்பர்கள் யாருடனும் சகஜமாக பேசமுடியவில்லை, மேலும் எனது அப்பா அம்மாவுக்கும் எந்த வேலையும் செய்து கொடுக்க முடியவில்லை.

எனக்கு வாழப் பிடிக்கவில்லை. அதனால் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் கிடையாது, இது நானே எடுத்த முடிவு, ஐ லவ்யூ அப்பா, அம்மா, தங்கை, பாட்டி, நண்பர்கள் என உருக்கமாக எழுதியிருந்தது. கடித்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com