தஞ்சாவூர்: காய்கறிகள் விற்று படிப்புக்கு பணம் சேர்க்கும் பள்ளி மாணவர்கள்

தஞ்சாவூர்: காய்கறிகள் விற்று படிப்புக்கு பணம் சேர்க்கும் பள்ளி மாணவர்கள்
தஞ்சாவூர்: காய்கறிகள் விற்று படிப்புக்கு பணம் சேர்க்கும் பள்ளி மாணவர்கள்

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே மேலத்திருப்பந்துருத்தி மாணவர்கள் காய்கறி விற்று தங்களுடைய படிப்பு செலவிற்காக பணம் சேர்த்து வைக்கின்றனர்.

திருவையாறு அடுத்த மேலத்திருப்பந்துருத்தியில் வசிக்கும் சிறுவர்கள் தங்களுடைய நண்பர்களுடன் இணைந்து காய்கறி விற்று அதன்மூலம் கிடைக்கும் பணத்தை படிப்பு செலவிற்காக சேர்த்து வைப்பதாக தெரிவித்தனர். கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுவர்கள், மொபைலில் கேம் விளையாடவும் டிவி பார்த்தும் வருகின்றனர்.

இந்நிலையில், மேலத்திருப்பந்துருத்தியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள்; தங்களுடைய குடும்பத்திற்கு ஏதோ ஒரு வகையில் உதவியாக இருக்கட்டும் என்று மொத்த விலைக்கு காய்கறிகளை வாங்கி தெருத் தெருவாகச் சென்று விற்று வருகின்றனர். அவர்களுக்கு பொதுமக்கள் பெரும் ஆதரவை நல்கி வருகிறார்கள்.

கொரோனா விதிமுறைகளைய பின்பற்றி முகக்கவசம் அணிந்து தங்களை பாதுகாத்துக் கொண்டு சமூக இடைவெளியோடு காய்கறி விற்று படிப்புக்காக பணம் சேர்க்கும் மாணவர்களை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com