ஆபத்தான இடத்தில் பாடம் கற்கும் குழந்தைகள் - தேனியில் அவலம்

ஆபத்தான இடத்தில் பாடம் கற்கும் குழந்தைகள் - தேனியில் அவலம்

ஆபத்தான இடத்தில் பாடம் கற்கும் குழந்தைகள் - தேனியில் அவலம்
Published on

தேனி மாவட்டத்தில் பள்ளிக்கட்டடம் இல்லாததால், ஊருக்கு வெளியே உள்ள வனத்துறையின் கட்டடத்தில் வகுப்புகள் நடத்தப்படும் அவலம் அரங்கேறி வருகிறது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கொட்டோடைபட்டியில் இருந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக் கட்டடம் மிகவும் பழுதடைந்து இருந்தது. இதனால் அந்தக் கட்டடம் 2 ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது. புதிய கட்டடம் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதால், மாணவர்களுக்கு‌ பாடம் நடத்த இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே, ஊருக்கு வெளியே புதர்மண்டிய பகுதியில் அமைந்துள்ள வனத்துறைக்குச் சொந்தமான கட்டடத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தினமும் காலை நேரம் ஊரின் ஓரிடத்தில் திரளும் மாணவர்கள், அங்கிருந்து இருக்கைகள், வருகைப் பதிவேடுகள் போன்றவற்றோடு புறப்பட்டுச் செல்கின்றனர். பள்ளி நேரம் முடிந்த பிறகு அந்தப் பொருட்கள் ஊருக்குள் இருக்கும் ஒரு வீட்டில் பத்திரமாக வைக்கப்படுகின்றன. இந்த அவலத்தைப் போக்க, புதிய பள்ளிக்கட்டடத்தை விரைந்து கட்டி முடிக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com